Friday 22 April 2011

எண்கணிதம்

எண்கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு பிரிவு (அல்லது அதன் முன்னோடி) ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும் இவற்றுடன் சேர்க்கப்படுவதுண்டு. எண்கணிதக் கணிப்பு ஒரு செய்முறை ஒழுங்குக்கு அமையச் செய்யப்படுகின்றது.

இயற்கை எண்கள், முழு எண்கள், விகிதமுறு எண்கள் (பின்ன வடிவிலானவை) மற்றும் உண்மை எண்கள் (தசம எண்கள்) என்பவை தொடர்பான எண்கணிதம் பொதுவாக ஆரம்ப வகுப்பு மாணவர்களால் கற்கப்படுகின்றது. நூற்றுவீத அடிப்படையில் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைகளும் இந் நிலையிலேயே கற்கப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பாலான நாடுகளில் ஆரம்பநிலை மாணவர்கள் கூட்டல் வாய்பாடு, பெருக்கல் வாய்பாடு என்பவற்றை மனனம் செய்வது கட்டாயமானது. இது வாழ்நாள் முழுவதும் எண்கணிதச் செய்கைகளைச் செய்வதற்கு அம் மாணவனுக்கு வேண்டியது. தற்காலத்தில் பெரும்பாலான வளர்ந்தவர்கள் எல்லா எண்கணிதக் கணிப்புகளுக்கும் கணிப்பொறி அல்லது கணினிகளையே உபயோகிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.